அமராவதி அணையில் ரூ.3 லட்சத்தில் கற்றாழை பூங்கா
அமராவதி அணையில் ரூ.3 லட்சத்தில் கற்றாழை பூங்கா
அமராவதி அணையில் ரூ.3 லட்சத்தில் கற்றாழை பூங்கா
ADDED : ஜூன் 03, 2010 05:25 AM
உடுமலை: அமராவதி அணை பூங்காவில் 3 லட்சம் ரூபாய் செலவில் "கற்றாழை பூங்கா' அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், மிகப்பெரிய அளவிலான பூங்கா உள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூங்கா பராமரிக்கப்பட்டு, மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அணையின் மேல் பகுதிக்கு செல்லும் பகுதியில், அணை அமைக்கப்படும் போது இருந்த பாறைகள் "ராக்கார்டன்' ஆக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாரமரிப்பு இல்லாமல் கற்றாழை செடிகள் வளர்ந்தன. இதனை, மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி ஆய்வு செய்த போது, "ராக்கார்டன்' பகுதியில் கற்றாழை பூங்கா அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், உடுமலை எம்.எல்.ஏ., சண்முகவேலு தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் , மூன்று லட்சம் ரூபாய் செலவில் "கற்றாழை பூங்கா' அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பூங்காவில், கற்றாழையிலுள்ள நூற்றுக்கணக்கான வகை கற்றாழைகள் நடப்படுகின்றன. தற்போது, பூங்காவிற்கான கட்டட பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் கற்றாழை பூங்கா பணிகள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.